Friday, July 10, 2009

நட்பு

"என்னுடைய குறைகளை நீங்கள் சுட்டிக் காட்டாவிட்டால் உங்களிடமிருந்து எனக்கு எந்த நன்மையுமில்லை. அப்படி உங்களால் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னிடம் எந்த நன்மையுமில்லை. " என்று நபிகளாரின் தோழர் அபூபக்கர் சித்தீக் கூறயுள்ளார்.

நண்பரை அளவோடு நேசியுங்கள். என்றாவது ஒருநாள் அவர் உங்களின் பகைவராகக் கூடும். பகைவரை அளவோடு பகைத்துக் கொள்ளுங்கள் என்றாவது ஒருநாள் அவர் உங்களின் நண்பராகக் கூடும்." என்று நபிகளார் கூறயுள்ளார்.

சிரித்து மகிழவும், வெறுமனே பொழுதுபோக்கவும் சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ளவும் தான் இன்று நட்பு தேவைப்படுகிறது.

Wednesday, July 8, 2009

தற்கொலை

இந்தியாவில் தினமும் 16 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு வருடத்தில் 6,000 பேர்.

2006 ல் தமிழகத்தில் மட்டும் 12,381 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது நாட்டின் மொத்த தற்கொலையில் 18.9 % ஆகும். அகில இந்திய அளவில் தமிழகம் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

(Source : India Today, April 30, 2008)

விமான விபத்துக்கள்

கடந்த 2008ல் மொத்தம் 109 விமான விபத்துக்கள் நடந்திருக்கின்றன. அதாவது நான்கு நாட்களுக்கு ஒரு விபத்து. 71 விமானங்கள் பயணிகள் விமானங்கள்.

ஓடு தளத்தில் கோளாறால் - 25 சதவீதம்.
தரைச் சேதாரத்தில் - 17 சதவீதம்.
வானில் பறக்கையில் ஏற்பட்ட கோளாறால் - 13 சதவீதம்.
ஓடு தளத்தில் மோதலால் - 2 சதவீதம்.
தரையிறங்கும் போதுதான் பெரும்பாலான விபத்துக்கள் நடந்துள்ளன - 47 சதவீதம்.

உடல் பராமரிப்பு

தலைமுடி செம்பட்டையாகிவிடாமல் தடுப்பது எப்படி?
கொளுத்தும் வெயில் கோடையில் மண்டையைக் காயவைக்கையில், அடிக்கடி நீச்சல் குளத்தில் குளிப்பது செம்பட்டையாவதற்கு வழி செய்யும்.

சொன்னது. . .

உலகின் அதிக வளம் கொழிக்கும் நாடுகளாக முஸ்லிம் நாடுகள் உள்ளன. அதனால்தான் யு.எஸ். மற்றும் யு.கே. ஆகியவற்றின் வெறிபிடித்த பேராசைகளுக்கு இந்த நாடுகள் அடிக்கடி இலக்காகின்றன. இதுவே எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
- நோம் சோம்ஸ்கி

உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஓர் இந்தியர் இடம் பெற்றுவிட்டார்
என்பது வளர்ச்சி அல்ல; சுரண்டல் ஆகும்.
- டாக்டர் இராமதாஸ்

மத்திய கிழக்காசிய நாடுகளில் பயங்கரவாதமும், தீவிரவாதமும் இல்லாமல்தான் இருந்தது. எப்போது அமெரிக்கா இங்கு கால் பதித்ததோ அப்போது அது இங்கேயும் தொற்றிக்கொண்டது.
- மஹ்மூத் அஹ்தின் நிஜாதி, ஈரான் அதிபர்

போரின் கோரமுகம்





Monday, July 6, 2009

மேலாண்மை குருவான பீட்டர் டிரக்கர் கூறியது : "இனி ஏழை நாடுகள் இருக்காது. இனி அறியாமையில் உழலும் நாடுகள்தான் இருக்கும்."

கல்வியின் இன்றைய நிலை

* பள்ளியை முடிக்கும் ஒன்பது மாணவர்களில் ஒருவர்தான் கல்லூரியில் சேருகிறார்கள். இந்தியாவில் 11 சதவீதமும் அமெரிக்காவில் 83 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேருகிறார்கள்.

* நாஸ்காம்-மெக்கின்ஸி செய்த ஆய்வின்படி கலைப்படிப்பில் பட்டம் பெற்ற 10 மாணவர்களில் ஒருவரும் பொறியியல் பட்டம் பெற்ற 4 மாணவர்களில் ஒருவர்தான் உடனே வேலையில் சேரும் தகுதியுடையவர்கள்.

* இந்தியாவில் 90 சதவீதக் கல்லூரிகளும் 70 சதவீத பல்கலைக்கழகங்களும் தரம் குறைந்தவையாக இருக்கிறது.

* ஐ.ஐ.டியில் கூட 15 முதல் 25 சதவீத அளவுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது.

* மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான நிர்ப்பந்தம் எல்லை மீறியிருப்பதால் தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

* வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் மொத்தச் செலவு 7 பில்லியன் டாலர்.

* வட இந்திய கிராமப் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளில் வகுப்புகளே நடப்பதில்லை.

துளிகள் 1

* மேலை நாடுகளுடன் ஒப்பிட்டால் ஆசியப் பெண்களுக்குத்தான் எலும்பு அடர்த்தி குறைவால் ஆஸ்டியோபொரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகம்.

* 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏழு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் உடல் பருமன். அடிவயிறு மற்றும் கைகளில் சேரும் கொழுப்பு. 40 வயதுக்குப் பின் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

Tuesday, June 30, 2009

பொது அறிவு

கடல்
* கடலின் மிக அதிக ஆழம் 11,033 மீட்டர்.

* கடலுக்கடியில் 285 அடி ஆழம் வரை மனிதன் சென்றுள்ளான்.

* 600 அடி ஆழத்திற்குப் பிறகுதான் நிஜக் கடல் ஆரம்பமாகிறது.

Thursday, June 18, 2009

பயணம். . .

ஒவ்வொரு பயணமும் மனித மனத்தை விரிவுபடுத்தவோ சுருக்கவோ வல்லமை படைத்தது.

Friday, May 15, 2009

வி.பி.சிங்

விஸ்வநாத் பிரதாப் சிங் என்பதே வி.பி.சிங்.

வி.பி.சிங் அவர்கள் தனது 11 மாத ஆட்சிக் காலத்தில் கீழ்தட்டு மக்களுக்காக பாடுப்படடவர். இதற்காகவே அவர் ஆட்சியை பி.ஜெ.பி. கவிழ்த்தது. பி.ஜெ.பி. செய்த சாதனைகளுள் இதுவும் ஒன்று.

அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்து, கைது செய்ததும் வி.பி.சிங் அவர்களே. இதற்காகவே அவர் அரசை கவிழ்த்தனர்.

மண்டல் கமிஷன் அமல்படுத்தப்படுவதற்கு வி.பி.சிங் அரசுக்கு ஆதரவாக 142 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எதிராக 346 வாக்குகள் பதிவாயின.

டெல்லியில் குடிசை வாழ் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்தவர்.

இன்னும் தொடரும். . .

Tuesday, May 12, 2009

நரேந்திர மோடி

இந்தியாவின் ஒரே மதம் இந்து மதம்தான் என்பதைச் செயல்படுத்துபவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

பதவி ஏற்றதும், குஜராத் மலை மாவட்டங்களின் மாதா கோயில்களை இடித்து அங்கே அனுமன் ஆலயங்கள் எழுப்பினர். கன்னிகாஸ்திரீகள் களங்கப்படுத்தப்பட்டனர் .

'குஜராத் ஓர் இந்து ராஜ்யம்' என்று எல்லை அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டன.

'குஜராத்தில் நீதி உறங்கிவிட்டது. வகுப்புப் கலவர வழக்குகளை வேறு மாநிலத்தில்தான் நடத்த வேண்டும். கொடுங்கோலன் நீரோ மன்னனைப் போல, மோடி நடந்துகொள்கிறார்' என்று பெஸ்ட் பேக்கரி வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

பொடா சட்டத்தின் கீழ் 300 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று மாத மதக் கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பலியானாலும் ஒரே ஒரு இந்துத்வா ஆசாமிகூட கைது செய்யப்படவில்லை.

மோடியை பதவியை விட்டு இறக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவர் குஜராத்தில் செயல்படுத்திய இந்துத்துவா திட்டங்கள், செய்த கலவரங்கள், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை அடித்து நோறிக்கியது ஆகியவைதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குப் பிடித்த செயல் திட்டங்கள்.

இந்திய முழுக்க 'குஜராத்துகளை' நடத்தினால்தான் 'இந்து ராஜ்யத்தை' அமைக்க முடியும் என்பது அவர்களின் நோக்கம். அதை மோடியால் மட்டுமே செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.

பி.ஜே.பி சிறு குறிப்பு

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது எப்படி என்றால், மக்களுக்கு காங்கிரஸ் மீதிருந்த கோபமே.

ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பற்றி சிந்திக்காமல், பாடத்திட்டங்களை மாற்றுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக சங்பரிவார அமைப்புகளைத் தூண்டிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு தேசத்தின் அமைதியையும், மக்களின் மன ஒற்றுமையும் சிதைக்கும் செயலிலே கவனம் செலுத்தினர்.

இன்னும் பார்ப்போம் . . .

மதம்

மதங்கள் மக்களிடையே ஒற்றுமை - நேச உணர்வை - மனித நேயத்தை வளர்க்க உதவுகின்றன என்கின்றனர். ஆனால் இன்றோ மதத்தின் பெயரால் பேதங்களும் வேற்றுமைகளும் நிலவுகின்றன.

மக்களை தரம் பிரித்து வகுப்பினராக இழிவுப்படுத்துகிற எந்த வேதமும் கடவுள் சொன்ன வேதம் அல்ல.

இறைவன்

ஓர் இறைவன்

பகவத்கீதை
தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும், முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோரிடத்திலும், பூதங்களை வணங்குபவர்கள் பூதங்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ என்னிடம் வருவார்கள்.
- பகவத்கீதை (9:25)

பைபிள்
நானே தேவன். எனக்கு சமானன் இல்லை.
- ஏசாயா (46:9)

நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
- உபாகமம் (6:4)

குர்ஆன்
உங்களுடைய இறைவன் ஒரே இறைவன் தான்.
- திருக்குர்ஆன் (16:20)

Sunday, May 10, 2009

துளிகள்


* துன்புறுத்துதல் என்பது உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் தான்.

பெரியார் சிந்தனைகள்

* முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடித்துக் கொள்ளும். அறிவு சீக்கிரத்தில் நெருப்புப் பிடிக்கமுடியாது.

* மற்றவர்களுக்கு உரிமை கொடுக்க சம்மதிக்காதவன், தன் உரிமை போகிறதே என்று கூறுவது எந்தவிதத்தில் யோக்கியமான காரியமாகும்.

ஜென் தத்துவங்கள். . .

காலம்
யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.

மதம்
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.

இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.

தேடுதல்
கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

தன்னைப் போல் பிறரையும் நேசி.

எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் போடாதே.

சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல். சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

அறியாமை
அறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .

பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.

நான்
'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்' என்னும் போது அங்கே 'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.

மௌனம்
மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.

காலம்
காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.

கடவுளின் பெயரில் கொலைகள். . .

கடவுள் பெயர் கொண்டு கொலை செய்யலாம் என்றால், நீங்கள் எந்த கடவுளை வணங்குகிறீர்கள்?

மதச்சார்பற்ற அரசு

இந்தியா மதச்சார்பற்ற அரசு. மதச்சார்பின்மை என்றால் என்ன? மதத்திற்கும் அரசாங்கத்திற்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது.

துவேசம்

ஒருவர் மற்றவரை அறியாமல் இருப்பதால் தான் துவேசங்கள், வெறுப்புகள் ஏற்படுகின்றன.

தமிழ்நாட்டின் நிலவரம். . .

* தமிழ்நாட்டில் இன்னும் 90 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கிடையாது.

* எழுபதுகள் வரை தமிழ்நாட்டில் மது விலக்கு அமலில் இருந்தது.

* கடந்த ஜெயலலிதா ஆட்சியில் மதுவினால் அரசுக்கு கிடைத்த லாபம் 4000 கோடி. இந்த ஆட்சியில் 8400 கோடியாக உயர்ந்துள்ளது.

Saturday, May 9, 2009

அரசியல் ஓர் அறிமுகம் . . .

வல்லுனர்களின் பார்வையில். . .

* தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளில், பெரும்பாலான காலம் ஆட்சிப் பொறுப்பு பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள் வசம்தான் இருந்திருக்கிறது.

* அரசியல்வாதிக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்?

மூன்று தகுதிகள்தான். மக்களின் நிஜமான தேவைகள் என்ன அந்த அவர்களுடன் நெருங்கிப் பழகி அறியும் ஆற்றல். அதை நிறைவேற்ற வேண்டிய நிர்வாக இயந்திரத்தைச் செயல்பட வைக்கும் துடிப்பு. அந்தச் செயல்பாட்டில் நேர்மை.

* தன்னை விமர்சிப்பவன் எதிரியின் நண்பன் என்றும், எதிரியை விமர்சிப்பவன் தன் நண்பன் என்றும் குழப்பம் அரசியல் சூழலில் நிலவுகிறது.

விவாதம். . .

உணர்வுள்ள எந்தக் குடிமகனும் தான் வாழும் சமூகம் பற்றி தீர்க்கமான சிந்தனைகளோடு இருப்பது அவசியம். அந்தச் சிந்தனைகளை அடுத்தவர்களோடு பகிர்த்துக்கொள்வதும் அவசியம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சுவாமி சுகபோனந்தா அறிவுரை. . .

* வாழ்க்கை பல சமயங்களில் நியாயமானது. சில சமயங்களில் அநியாயமானது.

* நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். உலகம் தானாகவே மாறும்.

* எல்லாவற்றையும் அரவணைத்துக் கொள்வதுதான் அன்பு. எதையும் தவிர்ப்பதல்ல அன்பு.

* சுதந்திரம் என்பது பிணைப்புகள் இல்லாமல் இருப்பது அல்ல. பிணைப்புகள் இருந்தாலும் செயல்படுவது. சுதந்திரமாக செயல்படுங்கள் பிணைப்புகளையும் மதியுங்கள்.

* ஒரு பொருளை விரும்ப வேண்டுமானால் அல்லது விலக்க வேண்டுமானால் மனதை அதற்கு தயார்படுத்துவது அவசியம்.

* பொறுமை இருந்தால் பல கதவுகள் திறக்கும்.

* சிறுத்தையின் புள்ளிகள் மாறாது.

* நேர்மை பலன்தரும். சிலருக்கு அது தரும் பலன் போதுமானதாகத் தோன்றுவதில்லை .

* கணக்கிட்டு அன்பு செய்பவன் நம்பக்கூடிய நண்பனல்ல.

* மன்னிப்பதால் இதயம் மேலும் பாசத்தால் நிரம்பும்.

* தோற்போம் என்ற பயமே தோல்வியின் தந்தை.

* சிலர் சந்தோசத்துக்காக வேலை செய்வார்கள். அறிவுடையோர்க்கு வேலை எதுவானாலும் சந்தோஷமே.

Friday, May 8, 2009

தமிழ் குரான்

தமிழில் குரான்
பதிவிறக்கம் செய்க . . .

தலைப்புகள்

இந்த இணையத்தளத்தில் பல தலைப்பைப் பற்றி நாம் விவாதிக்கப்போறோம். குறிப்பாக வரலாறு, அறிவியல், அரசியல், வாழ்க்கை கல்வி, இன்னும் பல தலைப்புகள் உள்ளளன.

அதற்கான வேலைகள் துவங்கி விட்டன.
மிக விரைவில். . .