இந்தியாவின் ஒரே மதம் இந்து மதம்தான் என்பதைச் செயல்படுத்துபவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
பதவி ஏற்றதும், குஜராத் மலை மாவட்டங்களின் மாதா கோயில்களை இடித்து அங்கே அனுமன் ஆலயங்கள் எழுப்பினர். கன்னிகாஸ்திரீகள் களங்கப்படுத்தப்பட்டனர் .
'குஜராத் ஓர் இந்து ராஜ்யம்' என்று எல்லை அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டன.
'குஜராத்தில் நீதி உறங்கிவிட்டது. வகுப்புப் கலவர வழக்குகளை வேறு மாநிலத்தில்தான் நடத்த வேண்டும். கொடுங்கோலன் நீரோ மன்னனைப் போல, மோடி நடந்துகொள்கிறார்' என்று பெஸ்ட் பேக்கரி வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
பொடா சட்டத்தின் கீழ் 300 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று மாத மதக் கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பலியானாலும் ஒரே ஒரு இந்துத்வா ஆசாமிகூட கைது செய்யப்படவில்லை.
மோடியை பதவியை விட்டு இறக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவர் குஜராத்தில் செயல்படுத்திய இந்துத்துவா திட்டங்கள், செய்த கலவரங்கள், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை அடித்து நோறிக்கியது ஆகியவைதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குப் பிடித்த செயல் திட்டங்கள்.
இந்திய முழுக்க 'குஜராத்துகளை' நடத்தினால்தான் 'இந்து ராஜ்யத்தை' அமைக்க முடியும் என்பது அவர்களின் நோக்கம். அதை மோடியால் மட்டுமே செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.
0 comments:
Post a Comment