Showing posts with label வாழ்க்கை கல்வி. Show all posts
Showing posts with label வாழ்க்கை கல்வி. Show all posts

Friday, July 10, 2009

நட்பு

"என்னுடைய குறைகளை நீங்கள் சுட்டிக் காட்டாவிட்டால் உங்களிடமிருந்து எனக்கு எந்த நன்மையுமில்லை. அப்படி உங்களால் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னிடம் எந்த நன்மையுமில்லை. " என்று நபிகளாரின் தோழர் அபூபக்கர் சித்தீக் கூறயுள்ளார்.

நண்பரை அளவோடு நேசியுங்கள். என்றாவது ஒருநாள் அவர் உங்களின் பகைவராகக் கூடும். பகைவரை அளவோடு பகைத்துக் கொள்ளுங்கள் என்றாவது ஒருநாள் அவர் உங்களின் நண்பராகக் கூடும்." என்று நபிகளார் கூறயுள்ளார்.

சிரித்து மகிழவும், வெறுமனே பொழுதுபோக்கவும் சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ளவும் தான் இன்று நட்பு தேவைப்படுகிறது.

Sunday, May 10, 2009

ஜென் தத்துவங்கள். . .

காலம்
யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.

மதம்
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.

இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.

தேடுதல்
கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

தன்னைப் போல் பிறரையும் நேசி.

எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் போடாதே.

சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல். சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

அறியாமை
அறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .

பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.

நான்
'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்' என்னும் போது அங்கே 'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.

மௌனம்
மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.

காலம்
காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.

Saturday, May 9, 2009

சுவாமி சுகபோனந்தா அறிவுரை. . .

* வாழ்க்கை பல சமயங்களில் நியாயமானது. சில சமயங்களில் அநியாயமானது.

* நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். உலகம் தானாகவே மாறும்.

* எல்லாவற்றையும் அரவணைத்துக் கொள்வதுதான் அன்பு. எதையும் தவிர்ப்பதல்ல அன்பு.

* சுதந்திரம் என்பது பிணைப்புகள் இல்லாமல் இருப்பது அல்ல. பிணைப்புகள் இருந்தாலும் செயல்படுவது. சுதந்திரமாக செயல்படுங்கள் பிணைப்புகளையும் மதியுங்கள்.

* ஒரு பொருளை விரும்ப வேண்டுமானால் அல்லது விலக்க வேண்டுமானால் மனதை அதற்கு தயார்படுத்துவது அவசியம்.

* பொறுமை இருந்தால் பல கதவுகள் திறக்கும்.

* சிறுத்தையின் புள்ளிகள் மாறாது.

* நேர்மை பலன்தரும். சிலருக்கு அது தரும் பலன் போதுமானதாகத் தோன்றுவதில்லை .

* கணக்கிட்டு அன்பு செய்பவன் நம்பக்கூடிய நண்பனல்ல.

* மன்னிப்பதால் இதயம் மேலும் பாசத்தால் நிரம்பும்.

* தோற்போம் என்ற பயமே தோல்வியின் தந்தை.

* சிலர் சந்தோசத்துக்காக வேலை செய்வார்கள். அறிவுடையோர்க்கு வேலை எதுவானாலும் சந்தோஷமே.