Tuesday, June 30, 2009
பொது அறிவு
* கடலின் மிக அதிக ஆழம் 11,033 மீட்டர்.
* கடலுக்கடியில் 285 அடி ஆழம் வரை மனிதன் சென்றுள்ளான்.
* 600 அடி ஆழத்திற்குப் பிறகுதான் நிஜக் கடல் ஆரம்பமாகிறது.
Thursday, June 18, 2009
Friday, May 15, 2009
வி.பி.சிங்
வி.பி.சிங் அவர்கள் தனது 11 மாத ஆட்சிக் காலத்தில் கீழ்தட்டு மக்களுக்காக பாடுப்படடவர். இதற்காகவே அவர் ஆட்சியை பி.ஜெ.பி. கவிழ்த்தது. பி.ஜெ.பி. செய்த சாதனைகளுள் இதுவும் ஒன்று.
அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்து, கைது செய்ததும் வி.பி.சிங் அவர்களே. இதற்காகவே அவர் அரசை கவிழ்த்தனர்.
மண்டல் கமிஷன் அமல்படுத்தப்படுவதற்கு வி.பி.சிங் அரசுக்கு ஆதரவாக 142 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எதிராக 346 வாக்குகள் பதிவாயின.
டெல்லியில் குடிசை வாழ் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்தவர்.
இன்னும் தொடரும். . .
Tuesday, May 12, 2009
நரேந்திர மோடி
இந்தியாவின் ஒரே மதம் இந்து மதம்தான் என்பதைச் செயல்படுத்துபவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
பதவி ஏற்றதும், குஜராத் மலை மாவட்டங்களின் மாதா கோயில்களை இடித்து அங்கே அனுமன் ஆலயங்கள் எழுப்பினர். கன்னிகாஸ்திரீகள் களங்கப்படுத்தப்பட்டனர் .
'குஜராத் ஓர் இந்து ராஜ்யம்' என்று எல்லை அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டன.
'குஜராத்தில் நீதி உறங்கிவிட்டது. வகுப்புப் கலவர வழக்குகளை வேறு மாநிலத்தில்தான் நடத்த வேண்டும். கொடுங்கோலன் நீரோ மன்னனைப் போல, மோடி நடந்துகொள்கிறார்' என்று பெஸ்ட் பேக்கரி வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
பொடா சட்டத்தின் கீழ் 300 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று மாத மதக் கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பலியானாலும் ஒரே ஒரு இந்துத்வா ஆசாமிகூட கைது செய்யப்படவில்லை.
மோடியை பதவியை விட்டு இறக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவர் குஜராத்தில் செயல்படுத்திய இந்துத்துவா திட்டங்கள், செய்த கலவரங்கள், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை அடித்து நோறிக்கியது ஆகியவைதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குப் பிடித்த செயல் திட்டங்கள்.
இந்திய முழுக்க 'குஜராத்துகளை' நடத்தினால்தான் 'இந்து ராஜ்யத்தை' அமைக்க முடியும் என்பது அவர்களின் நோக்கம். அதை மோடியால் மட்டுமே செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.
பி.ஜே.பி சிறு குறிப்பு
ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பற்றி சிந்திக்காமல், பாடத்திட்டங்களை மாற்றுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக சங்பரிவார அமைப்புகளைத் தூண்டிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு தேசத்தின் அமைதியையும், மக்களின் மன ஒற்றுமையும் சிதைக்கும் செயலிலே கவனம் செலுத்தினர்.
இன்னும் பார்ப்போம் . . .
மதம்
மக்களை தரம் பிரித்து வகுப்பினராக இழிவுப்படுத்துகிற எந்த வேதமும் கடவுள் சொன்ன வேதம் அல்ல.
இறைவன்
பகவத்கீதை
தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும், முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோரிடத்திலும், பூதங்களை வணங்குபவர்கள் பூதங்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ என்னிடம் வருவார்கள்.
- பகவத்கீதை (9:25)
பைபிள்
நானே தேவன். எனக்கு சமானன் இல்லை.
- ஏசாயா (46:9)
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
- உபாகமம் (6:4)
குர்ஆன்
உங்களுடைய இறைவன் ஒரே இறைவன் தான்.
- திருக்குர்ஆன் (16:20)