Wednesday, July 8, 2009
கடந்த 2008ல் மொத்தம் 109 விமான விபத்துக்கள் நடந்திருக்கின்றன. அதாவது நான்கு நாட்களுக்கு ஒரு விபத்து. 71 விமானங்கள் பயணிகள் விமானங்கள்.
ஓடு தளத்தில் கோளாறால் - 25 சதவீதம்.
தரைச் சேதாரத்தில் - 17 சதவீதம்.
வானில் பறக்கையில் ஏற்பட்ட கோளாறால் - 13 சதவீதம்.
ஓடு தளத்தில் மோதலால் - 2 சதவீதம்.
தரையிறங்கும் போதுதான் பெரும்பாலான விபத்துக்கள் நடந்துள்ளன - 47 சதவீதம்.
உடல் பராமரிப்பு
கொளுத்தும் வெயில் கோடையில் மண்டையைக் காயவைக்கையில், அடிக்கடி நீச்சல் குளத்தில் குளிப்பது செம்பட்டையாவதற்கு வழி செய்யும்.
சொன்னது. . .
- நோம் சோம்ஸ்கி
உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஓர் இந்தியர் இடம் பெற்றுவிட்டார்
என்பது வளர்ச்சி அல்ல; சுரண்டல் ஆகும்.
- டாக்டர் இராமதாஸ்
மத்திய கிழக்காசிய நாடுகளில் பயங்கரவாதமும், தீவிரவாதமும் இல்லாமல்தான் இருந்தது. எப்போது அமெரிக்கா இங்கு கால் பதித்ததோ அப்போது அது இங்கேயும் தொற்றிக்கொண்டது.
- மஹ்மூத் அஹ்தின் நிஜாதி, ஈரான் அதிபர்
Monday, July 6, 2009
கல்வியின் இன்றைய நிலை
* பள்ளியை முடிக்கும் ஒன்பது மாணவர்களில் ஒருவர்தான் கல்லூரியில் சேருகிறார்கள். இந்தியாவில் 11 சதவீதமும் அமெரிக்காவில் 83 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேருகிறார்கள்.
* நாஸ்காம்-மெக்கின்ஸி செய்த ஆய்வின்படி கலைப்படிப்பில் பட்டம் பெற்ற 10 மாணவர்களில் ஒருவரும் பொறியியல் பட்டம் பெற்ற 4 மாணவர்களில் ஒருவர்தான் உடனே வேலையில் சேரும் தகுதியுடையவர்கள்.
* இந்தியாவில் 90 சதவீதக் கல்லூரிகளும் 70 சதவீத பல்கலைக்கழகங்களும் தரம் குறைந்தவையாக இருக்கிறது.
* ஐ.ஐ.டியில் கூட 15 முதல் 25 சதவீத அளவுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது.
* மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான நிர்ப்பந்தம் எல்லை மீறியிருப்பதால் தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
* வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் மொத்தச் செலவு 7 பில்லியன் டாலர்.
* வட இந்திய கிராமப் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளில் வகுப்புகளே நடப்பதில்லை.
துளிகள் 1
* 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏழு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் உடல் பருமன். அடிவயிறு மற்றும் கைகளில் சேரும் கொழுப்பு. 40 வயதுக்குப் பின் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது.




