Wednesday, July 8, 2009
சொன்னது. . .
- நோம் சோம்ஸ்கி
உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஓர் இந்தியர் இடம் பெற்றுவிட்டார்
என்பது வளர்ச்சி அல்ல; சுரண்டல் ஆகும்.
- டாக்டர் இராமதாஸ்
மத்திய கிழக்காசிய நாடுகளில் பயங்கரவாதமும், தீவிரவாதமும் இல்லாமல்தான் இருந்தது. எப்போது அமெரிக்கா இங்கு கால் பதித்ததோ அப்போது அது இங்கேயும் தொற்றிக்கொண்டது.
- மஹ்மூத் அஹ்தின் நிஜாதி, ஈரான் அதிபர்
Monday, July 6, 2009
கல்வியின் இன்றைய நிலை
* பள்ளியை முடிக்கும் ஒன்பது மாணவர்களில் ஒருவர்தான் கல்லூரியில் சேருகிறார்கள். இந்தியாவில் 11 சதவீதமும் அமெரிக்காவில் 83 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேருகிறார்கள்.
* நாஸ்காம்-மெக்கின்ஸி செய்த ஆய்வின்படி கலைப்படிப்பில் பட்டம் பெற்ற 10 மாணவர்களில் ஒருவரும் பொறியியல் பட்டம் பெற்ற 4 மாணவர்களில் ஒருவர்தான் உடனே வேலையில் சேரும் தகுதியுடையவர்கள்.
* இந்தியாவில் 90 சதவீதக் கல்லூரிகளும் 70 சதவீத பல்கலைக்கழகங்களும் தரம் குறைந்தவையாக இருக்கிறது.
* ஐ.ஐ.டியில் கூட 15 முதல் 25 சதவீத அளவுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது.
* மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான நிர்ப்பந்தம் எல்லை மீறியிருப்பதால் தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
* வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் மொத்தச் செலவு 7 பில்லியன் டாலர்.
* வட இந்திய கிராமப் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளில் வகுப்புகளே நடப்பதில்லை.
துளிகள் 1
* 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏழு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் உடல் பருமன். அடிவயிறு மற்றும் கைகளில் சேரும் கொழுப்பு. 40 வயதுக்குப் பின் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
Tuesday, June 30, 2009
பொது அறிவு
* கடலின் மிக அதிக ஆழம் 11,033 மீட்டர்.
* கடலுக்கடியில் 285 அடி ஆழம் வரை மனிதன் சென்றுள்ளான்.
* 600 அடி ஆழத்திற்குப் பிறகுதான் நிஜக் கடல் ஆரம்பமாகிறது.




