Friday, July 10, 2009

நட்பு

"என்னுடைய குறைகளை நீங்கள் சுட்டிக் காட்டாவிட்டால் உங்களிடமிருந்து எனக்கு எந்த நன்மையுமில்லை. அப்படி உங்களால் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னிடம் எந்த நன்மையுமில்லை. " என்று நபிகளாரின் தோழர் அபூபக்கர் சித்தீக் கூறயுள்ளார்.

நண்பரை அளவோடு நேசியுங்கள். என்றாவது ஒருநாள் அவர் உங்களின் பகைவராகக் கூடும். பகைவரை அளவோடு பகைத்துக் கொள்ளுங்கள் என்றாவது ஒருநாள் அவர் உங்களின் நண்பராகக் கூடும்." என்று நபிகளார் கூறயுள்ளார்.

சிரித்து மகிழவும், வெறுமனே பொழுதுபோக்கவும் சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ளவும் தான் இன்று நட்பு தேவைப்படுகிறது.

Wednesday, July 8, 2009

தற்கொலை

இந்தியாவில் தினமும் 16 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு வருடத்தில் 6,000 பேர்.

2006 ல் தமிழகத்தில் மட்டும் 12,381 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது நாட்டின் மொத்த தற்கொலையில் 18.9 % ஆகும். அகில இந்திய அளவில் தமிழகம் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

(Source : India Today, April 30, 2008)

விமான விபத்துக்கள்

கடந்த 2008ல் மொத்தம் 109 விமான விபத்துக்கள் நடந்திருக்கின்றன. அதாவது நான்கு நாட்களுக்கு ஒரு விபத்து. 71 விமானங்கள் பயணிகள் விமானங்கள்.

ஓடு தளத்தில் கோளாறால் - 25 சதவீதம்.
தரைச் சேதாரத்தில் - 17 சதவீதம்.
வானில் பறக்கையில் ஏற்பட்ட கோளாறால் - 13 சதவீதம்.
ஓடு தளத்தில் மோதலால் - 2 சதவீதம்.
தரையிறங்கும் போதுதான் பெரும்பாலான விபத்துக்கள் நடந்துள்ளன - 47 சதவீதம்.

உடல் பராமரிப்பு

தலைமுடி செம்பட்டையாகிவிடாமல் தடுப்பது எப்படி?
கொளுத்தும் வெயில் கோடையில் மண்டையைக் காயவைக்கையில், அடிக்கடி நீச்சல் குளத்தில் குளிப்பது செம்பட்டையாவதற்கு வழி செய்யும்.

சொன்னது. . .

உலகின் அதிக வளம் கொழிக்கும் நாடுகளாக முஸ்லிம் நாடுகள் உள்ளன. அதனால்தான் யு.எஸ். மற்றும் யு.கே. ஆகியவற்றின் வெறிபிடித்த பேராசைகளுக்கு இந்த நாடுகள் அடிக்கடி இலக்காகின்றன. இதுவே எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
- நோம் சோம்ஸ்கி

உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஓர் இந்தியர் இடம் பெற்றுவிட்டார்
என்பது வளர்ச்சி அல்ல; சுரண்டல் ஆகும்.
- டாக்டர் இராமதாஸ்

மத்திய கிழக்காசிய நாடுகளில் பயங்கரவாதமும், தீவிரவாதமும் இல்லாமல்தான் இருந்தது. எப்போது அமெரிக்கா இங்கு கால் பதித்ததோ அப்போது அது இங்கேயும் தொற்றிக்கொண்டது.
- மஹ்மூத் அஹ்தின் நிஜாதி, ஈரான் அதிபர்

போரின் கோரமுகம்





Monday, July 6, 2009

மேலாண்மை குருவான பீட்டர் டிரக்கர் கூறியது : "இனி ஏழை நாடுகள் இருக்காது. இனி அறியாமையில் உழலும் நாடுகள்தான் இருக்கும்."

கல்வியின் இன்றைய நிலை

* பள்ளியை முடிக்கும் ஒன்பது மாணவர்களில் ஒருவர்தான் கல்லூரியில் சேருகிறார்கள். இந்தியாவில் 11 சதவீதமும் அமெரிக்காவில் 83 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேருகிறார்கள்.

* நாஸ்காம்-மெக்கின்ஸி செய்த ஆய்வின்படி கலைப்படிப்பில் பட்டம் பெற்ற 10 மாணவர்களில் ஒருவரும் பொறியியல் பட்டம் பெற்ற 4 மாணவர்களில் ஒருவர்தான் உடனே வேலையில் சேரும் தகுதியுடையவர்கள்.

* இந்தியாவில் 90 சதவீதக் கல்லூரிகளும் 70 சதவீத பல்கலைக்கழகங்களும் தரம் குறைந்தவையாக இருக்கிறது.

* ஐ.ஐ.டியில் கூட 15 முதல் 25 சதவீத அளவுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது.

* மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான நிர்ப்பந்தம் எல்லை மீறியிருப்பதால் தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

* வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் மொத்தச் செலவு 7 பில்லியன் டாலர்.

* வட இந்திய கிராமப் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளில் வகுப்புகளே நடப்பதில்லை.

துளிகள் 1

* மேலை நாடுகளுடன் ஒப்பிட்டால் ஆசியப் பெண்களுக்குத்தான் எலும்பு அடர்த்தி குறைவால் ஆஸ்டியோபொரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகம்.

* 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏழு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் உடல் பருமன். அடிவயிறு மற்றும் கைகளில் சேரும் கொழுப்பு. 40 வயதுக்குப் பின் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது.